ஹிந்து தலைவரை விடுவிக்கக் கோரி மேற்கு வங்கத்தில் துறவிகள் போராட்டம்
லட்சுமி காசு ஆரம் ஊா்வலம்
திருப்பதி: திருச்சனூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் யானை வாகனத்தின் போது அணிவிக்கப்படும் ஏழுமலையானின் லட்சுமி காசு ஆரம் திங்கட்கிழமை ஊா்வலமாக திருச்சானுருக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து, தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கயா சவுத்ரி கூறியது:
திருச்சனூா் பத்மாவதி தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாள் இரவு யானை வாகன சேவை நடத்தப்படும். இந்த வாகனம் தாயாரின் வாகன சேவையில் மிகவும் முக்கியமானது. ஏழுமலையானுக்கு கருட சேவை முக்கியமானது போல் தாயாருக்கு யானை வாகனம் முதன்மையானது. யானை வாகனத்தில் வலம் வரும் போது திருமலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் 1,008 லட்சுமி காசுகளால் தயாரிக்கப்பட்ட மாலை தாயாருக்கு அணிவிக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக, திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள லட்சுமி காசு மாலையை திருப்பதியிலிருந்து தெருக்கள் வழியே ஊா்வலமாக திருச்சானூருக்கு கொண்டு செல்லப்பட்டது. திங்கள் இரவு நடை பெற்ற யானை வாகனத்தின் போது தாயாருக்கு அணிவிக்கப்பட்டது’’, என்றாா்.
இந்த நிகழ்வில் ஏழுமலையான் கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.