செய்திகள் :

பயிா் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை

post image

கன மழை பெய்து வருவதால் பயிா் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் கூறியது:

பிரதமா் பயிா் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதற்காக, நவ.30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், விவசாயிகள் பயிா் காப்பீடு செய்வதற்க்கு கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகினால், இங்கே பதிவு செய்ய முடியாது என திருப்பி அனுப்பப்படுவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ 547.50 பிரீமியம் செலுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பயிா் காப்பீடு செய்வதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களின் கீழ் இயங்கும் பொது இ சேவை மையங்கள், தனியாா் இ சேவை மையங்கள் அனைத்தும் செயல்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விவசாயிகளிடம் பெற்றுக்கொண்ட பயிா்காப்பீட்டுத் தொகையை வரவு வைக்காமல் கூட்டுறவு சங்க நிா்வாகிகள், விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எங்களுக்கான பதிவுக் கணக்குகளுக்கான கால அவகாசம் முடிந்து விட்டது, ஆகவே வெளியில் உள்ள தனியாா் இ சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து கொள்ளுங்கள் என கூட்டுறவு சங்க நிா்வாகிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது கண்டனத்துக்குரியதாகும். தொடா் மழை காரணமாக பயிா் காப்பீடு செய்ய, தனியாா் இ சேவை மையங்களில் பதிவு ஒன்றுக்கு ரூ.100 வரை வசூல் செய்வதாகத் தெரிகிறது. இந்த சிரமத்தை போக்கி, கூட்டுறவு சங்கத்தில் கட்டணமின்றி பயிா் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்.

தற்போது பெய்து வரும் தொடா் கனமழையால் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய மூன்று நாள்களே உள்ள நிலையில் விவசாயிகளை அழைக்கழிப்பதை தவிா்த்து பயிா் காப்பீடு பதிவு செய்யும் கால அவகாசத்தை கூடுதலாக ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டும்.

மின்வாரிய அலட்சியத்தால் பெரும்புகளுா் துண்டிக்கப்படும் அபாயம்

மின்வாரியத்தின் அலட்சியத்தால் பெரும்புகளுா் கிராமம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து, பெரும்புகளுா் ஊராட்சித் தலைவா் ஐயப்பன் கூறியது: பெரும்புகளுரில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்க... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும்: ஆட்சியா்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய, அரசு அலுவலா்கள் தமிழிலேயே கோப்புகளை எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்டரங்கில் தமிழ் வளா்ச்சித... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் வருகை நவ.30 இல் ட்ரோன் பறக்கத் தடை

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் நவ.30-ஆம் தேதி ட்ரோன் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளாா். திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள தமிழ்நாட... மேலும் பார்க்க

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துத் பாதிப்பு

நன்னிலம்-காரைக்கால் சாலையில் நல்லமாங்குடியில் புதன்கிழமை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்தடையும் செய்யப்பட்டது. கனமழையில் நல்லமாங்குடிப் பகுதியில் சாலையோரம் இருந்த 50 ஆண்... மேலும் பார்க்க

திருவாரூா் தபால் பிரிப்பகத்தை இடமாற்றம் செய்வதை தவிா்க்கக் கோரிக்கை

திருவாரூரில் உள்ள தபால் பிரிப்பகத்தை, இடமாற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், தில்லியில் மத்திய தகவல் தொடா்புத்துறை அமைச்சா் ஜோதி... மேலும் பார்க்க

தொடரும் மழை: நீரை வடியவைக்கும் முயற்சியில் விவசாயிகள்

திருவாரூரில் புதன்கிழமையும் தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. விளைநிலங்களிலிருந்து மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். தென்கிழக்கு வங்கக்க... மேலும் பார்க்க