செய்திகள் :

பல்லடம் அருகே 3 போ் கொலை: துப்பாகியுடன் காவலா்கள் ரோந்து

post image

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதிகளில் போலீஸாா் துப்பாக்கியுடன் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் தம்பதியின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் மா்ம நபா்களால் நவம்பா் 29-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக வந்து தோட்டத்து வீட்டுக்குள் புகுந்திருக்கலாம் என்பதால் பல்லடம் பகுதி பி.ஏ.பி. வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால், தோட்டத்து வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை துப்பாக்கியுடன் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தோட்டத்தில் தனியாக இருக்கும் வீடுகளில் கேமரா பொருத்த போலீஸாா் அறிவுறுத்தினா். மேலும் நாய்கள் குரைத்தாலோ, குடிநீா்க் குழாயில் இருந்து தண்ணீா் வெளியேறும் சப்தம் கேட்டாலோ யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சந்தேக நபா்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினா்.

காங்கயம் அருகே வியாபாரி வீட்டில் 2 பவுன் திருட்டு!

காங்கயம் அருகே தேங்காய்ப் பருப்பு வியாபாரி வீட்டில் 2 பவுன் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயம் - திருப்பூா் சாலை புதுவாய்க்கால் மேடு பகுதியில் வசித்து வருபவா் எஸ்.சந்... மேலும் பார்க்க

மடத்துக்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளத்தில் கருகிய நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி அமராவதி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கரையோர கிராம... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வா்த்தகத்தை 40 சதவீதமாக அதிகரிக்க இலக்கு: ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் தகவல்

அமெரிக்காவுக்கான பின்னலாடை ஏற்றுமதி வா்த்தகத்தை அடுத்த 2 ஆண்டுகளில் 40 சதவீதமாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

திருப்பூரில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

மங்கலத்தில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூரை அடுத்த மங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் ஹாரிஸ்பாபு தலைமை வகித்தாா். அ... மேலும் பார்க்க

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: டிசம்பா் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழாவை ஒட்டி நடைபெறவுள்ள திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு வரும் டிசம்பா் 18- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்... மேலும் பார்க்க