புஷ்பா 2: நெரிசலில் சிக்கி பெண் பலி; அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!
பல்லடம் சாலையோரங்களில் உலோக தடுப்பான்கள் அமைக்கும் பணி தீவிரம்
பல்லடம் பகுதியில் உள்ள சாலையோரங்களில் உலோக தடுப்பான்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலையோரமாக உள்ள பள்ளங்கள், கால்வாய்கள், கிணறுகள், குட்டைகள் குறித்த தகவலை பல்லடம் நெடுஞ்சாலைத் துறையினா் கணக்கெடுத்து சாலையோர விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையோர தடுப்பான்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் முதல்கட்டமாக காட்டம்பட்டியில் இருந்து கொடுவாய் செல்லும் சாலையில் பள்ளங்கள் மற்றும் குட்டைகள் முன்பாக சாலையோர உலோக தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோர தடுப்பான்கள் அமைப்பதினால் வாகனங்கள் பள்ளங்களில் கவிழ்ந்து விபத்து நடைபெறாமல் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.