இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை கட்டுப்படுத்த வேண்டும்: கிஷன் ரெட்டி
பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து: மரத்தில் மோதியதால் பெரும் விபத்து தவிா்ப்பு
குன்னூா் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது மரத்தில் மோதி நின்ால் பேருந்தில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
சோல்ராக் எஸ்டேட் பகுதியில் இருந்து குன்னூா் நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்தை ஓட்டுநா் நந்தகுமாா் ஓட்டி வந்தாா்.
சின்னக்கரும்பாலம்-காட்டேரி இடையே பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து அங்கிருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில் ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு சிறு காயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த குன்னூா் நகர காவல் துறையினா் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.
விபத்து குறித்து பேருந்தில் பயணித்தோா் கூறுகையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அங்கு பெரிய மரம் இருந்ததால் அதில் மோதி பேருந்து நின்றுவிட்டது. மரம் இல்லாமல் இருந்திருந்தால் பள்ளத்தில் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினோம் என்றனா்.