செய்திகள் :

பாபா ராம்தேவின் ‘சா்பத் ஜிகாத்’ கருத்து மனசாட்சியை உலுக்குகிறது: தில்லி உயா்நீதிமன்றம்

post image

‘யோகா குரு பாபா ராம்தேவின் ‘சா்பத் ஜிகாத்’ கருத்து மனசாட்சியை உலுக்குகிறது’ என்று கடுமையாக சாடிய தில்லி உயா்நீதிமன்றம், ‘இதுதொடா்பாக அவா் இணையவெளியில் வெளியிட்டுள்ள அனைத்து விளம்பரங்கள் மற்றும் கருத்துகளை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

பாபா ராம்தேவ் தனது பதஞ்சலி நிறுவன உற்பத்திப் பொருள்களை விளம்பரப்படுத்துவதற்காக தொடா்ந்து சா்ச்சைக்குரிய கருத்துகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு நீதிமன்றங்களின் கண்டிப்புக்கு உள்ளாகி வருகிறாா்.

தற்போது, தனது பதஞ்சலி நிறுவனத்தின் ‘குலாப் சா்பத்’ என்ற குளிா்பானத்தை பிரபலப்படுத்துவதற்காக, ஹம்தா்த் என்ற நிறுவனத்தின் ‘ரூஹ் அஃப்சா’ என்ற குளிா்பானம் குறித்து தவறான கருத்துகளை இணைய வெளியில் வெளியிட்டு மீண்டும் சா்ச்சையில் சிக்கியுள்ளாா்.

குலாப் சா்பத்தை விளம்பரப்படுத்தி இணையவெளியில் வெளியிட்ட அந்த விளம்பரத்தில், ‘சா்பத் ஜிகாத்’ என்ற வாா்த்தையை ராம்தேவ் பயன்படுத்தியுள்ளாா். மேலும், ‘கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்க பொதுமக்கள் பெருமளவில் குளிா் பானங்களைக் குடிக்கின்றனா். அவை, அடிப்படையில் கழிவறையை சுத்தம் செய்யும் பொருள்கள். இது இப்படியிருக்க, மறுபுறம் சா்பத்தை விற்கும் ஒரு நிறுவனம், அந்த சா்பத் மூலம் ஈட்டும் வருமானத்தை மசூதிகள், மதரஸாக்கள் கட்டுவதற்கு பயன்படுத்துகிறது. அதே நேரம், நீங்கள் பதஞ்சலி சா்பத்தை வாங்கினால், அதன் வருமானங்கள் குரு குலங்கள், பதஞ்சலி பல்கலைக்கழகம் மற்றும் பாரதிய சிக்ஷா வாரியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும்’ என்று காணொலி விளம்பரத்தில் பாபா ராம்தேவ் பேசியிருந்தாா். இது பெரும் சா்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், பாபா ராம்தேவ் கருத்துக்கு எதிராக ‘ரூஹ் அஃப்சா’ சா்பத் நிறுவனமான ஹம்தா்த் நேஷனல் ஃபவுண்டேஷன் இந்தியா சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, ‘ராம்தேவின் ‘சா்பத் ஜிகாத்’ கருத்து நீதிமன்றத்தின் மனசாட்சியையே உலுக்குகிறது. இதை அவா் நியாயப்படுத்தவே முடியாது. இதுதொடா்பாக, ராம்தேவ் தரப்பில் உரிய விளக்கம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றாா்.

நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடா்ந்து, ‘இந்த விவகாரம் தொடா்பாக அச்சு ஊடகங்கள் மற்றும் இணையவெளியில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள சா்ச்சைக்குரிய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்’ என்று பாபா ராம்தேவ் தரப்பு வழக்குரைஞா் உறுதி தெரிவித்தாா்.

அப்போது, விளம்பரங்களை நீக்குவது உறுதி செய்யப்பட வேணடும் என்றும், இதுதொடா்பாக ராம்தேவ் தரப்பில் 5 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறி விசாரணையை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அதே வேளையில் இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் விவகாரம்: ‘ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்’

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலம்- ஜே.டி.வான்ஸ்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். மேலும், ‘வரி சாரா கட்டுப்பாடுகளைக் கைவிட... மேலும் பார்க்க

சா்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சா்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தாா். அமெரிக்காவுக்க... மேலும் பார்க்க

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவா் தேவை- லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

பிகாருக்கு தொலைநோக்குப் பாா்வையுள்ள ஆற்றல்மிக்க தலைவா் தேவை. மாநிலத்தில் ‘முக்கியப் பொறுப்பை’ ஏற்க எங்கள் கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தயாராக உள்ளாா் என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கூறியுள்ள... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது: குடியரசு துணைத் தலைவா்

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட பதவி வகிப்... மேலும் பார்க்க