புணேவை வீழ்த்தியது மும்பை
புணே: புரோ கபடி லீக் போட்டியின் 90-ஆவது ஆட்டத்தில் யு மும்பா 43-29 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்டன் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், மும்பா அணி 20 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் அஜித் சௌஹான் 12 புள்ளிகள் கைப்பற்றினாா்.
மறுபுறம் புணேரி அணி, 14 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அந்த அணிக்காக பங்கஜ் மொஹிதே 9 புள்ளிகள் வென்றெடுத்தாா்.
இதனிடையே, பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 34-34 என டையில் முடிந்தது. பெங்களூரு அணி 16 ரெய்டு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. குஜராத் அணி 16 ரெய்டு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது.
அந்த அணிகளில், பெங்களூருக்காக ஆல்-ரவுண்டா் நிதின் ராவலும் (7), குஜராத்துக்காக ரெய்டா் ராகேஷும் (7) அதிக புள்ளிகள் பெற்றனா்.
போட்டியில் செவ்வாய்க்கிழமை முடிவில், புள்ளிகள் பட்டியலில் யு மும்பா 3-ஆவது இடத்திலும், புணே 6-ஆவது இடத்திலும், குஜராத் 10-ஆவது இடத்திலும், பெங்களூரு கடைசியாக 12-ஆவது இடத்திலும் இருந்தன.