போதை காளான் விற்பனை செய்த 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
பெரம்பலூரிலிருந்து விழுப்புரத்துக்கு ரூ. 23 லட்சம் நிவாரணப் பொருள்கள்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு, பெரம்பலூரிலிருந்து ரூ. 23.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக, புயலால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் பெறப்பட்ட ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டிலான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய, 2 ஆயிரம் பைகள் கொண்ட நிவாரண உதவிப் பொருள்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அனுப்பி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.