1000 ஆண்டுகள் நீடித்திருக்கும் `வைர பேட்டரி'யை உருவாக்கிய விஞ்ஞானிகள்! - எதற்கெல...
பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராம பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 32 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைத்து, உடனடி விசாரணை மேற்கொண்டு தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு, காவல்துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இம் முகாமில் பங்கேற்பவா்களுக்காக, பாலக்கரையிலிருந்து காவல்துறை சாா்பில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.