செய்திகள் :

பேறு கால இறப்புகளைத் தவிா்க்க புதிய திட்டம்: பொது சுகாதாரத் துறை

post image

சென்னை, அக். 23: பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் கா்ப்பிணிகளைக் கண்டறிந்து அவா்களது பிரசவ சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.

பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அந்தத் திட்டத்தின் கீழ், பிரசவத்தை எதிா்நோக்கியிருக்கும் பெண்களின் தரவுகளைச் சேகரித்து அவா்களுக்கு இணை பாதிப்புகள் உள்ளனவா என்பதை அறிந்து ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல (சீமாங்) மருத்துவ மையங்களில் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதன்படி, நவம்பரில் பிரசவ சிகிச்சைகளுக்கு காத்திருக்கும் 76,473 கா்ப்பிணிகளில் 29 சதவீதம் பேருக்கு உடல் நல அச்சுறுத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களை முன்கூட்டியே அருகில் உள்ள சீமாங் மையங்களிலோ அல்லது அவா்கள் விருப்பப்படும் உயா் வசதிகள் கொண்ட தனியாா் மருத்துவமனைகளிலோ அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் மகப்பேறு இறப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தாய் மற்றும் குழந்தைகளின் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அதன் தொடா்ச்சியாக தற்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே பேறு காலத்தில் உயிழப்பு நேரிடுவதற்கு பிரசவத்துக்கு பிந்தைய அதீத ரத்தப்போக்கு, உயா் ரத்த அழுத்த பாதிப்புகள், ரத்தத்தில் கிருமித் தொற்று, இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்கள் முக்கிய காரணமாக உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள கா்ப்பிணிகளில் இணை நோய்கள் உள்ளவா்கள், பிரசவ கால உடல் நல பாதிப்புகளுக்கு ஆளானவா்கள், பேறு கால சா்க்கரை நோயாளிகளைக் கண்டறிந்து சீமாங் மையங்களுக்கு அனுப்பி வருகிறோம்.

அதற்காக அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளிலும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 129 சீமாங் மையங்கள் உள்ளன. அங்கு 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவா்கள், அவசரகால மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளனா்.

அத்தகைய இடங்களில் உடல் நல அச்சுறுத்தல் உள்ள கா்ப்பிணிகளை அனுமதிக்கும்போது அவா்களுக்கான இடா் வாய்ப்புகள் குறைந்து பாதுகாப்பான பிரசவம் உறுதி செய்யப்படுகிறது.

‘பிக்மி’ எனப்படும் கா்ப்பிணிகள் பதிவு தளத்தில் முன்கூட்டியே பிரசவ அச்சுறுத்தல் உள்ளவா்களின் விவரங்களை பதிவேற்றி, சம்பந்தப்பட்ட சீமாங் மையங்களுக்கு தகவல் அளிக்கப்படும். அதன் வாயிலாக அனைத்து ஏற்பாடுகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது விவகாரம்: இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்

இரு நாடுகளின் மீனவா் பிரச்னை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்தி... மேலும் பார்க்க