5வது நாளாக உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்! ஐடி பங்குகள் உயர்வு!
பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இஸ்லாமியா்கள் சீா்வரிசை
பல்லடம் பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு இஸ்லாமியா்கள் சீா்வரிசைகளை ஊா்வலமாக எடுத்து வந்து கோயில் நிா்வாகிகளிடம் புதன்கிழமை வழங்கினா்.
பல்லடம் பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்காக பல்லடம் பெரிய பள்ளிவாசல் முன் இருந்து ஜாகூா் அகமது, அன்வா் அகமது, இப்திகாா் அகமது, கயாஸ் அகமது, சாகுல் அகமது, ஷானவாஸ், மப்கான், பசீா் அகமது ஆகிய இஸ்லாமியா்கள் பழங்கள், பூக்கள் சீா்வரிசை தட்டுக்களை ஏந்தி ஊா்வலமாக வந்து பொங்காளியம்மன் கோயில் நிா்வாகிகளிடம் புதன்கிழமை வழங்கினா்.
அவா்களை கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், மாவட்ட அறங்காவலா் ஆடிட்டா் முத்துராமன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மோகனசுந்தரராஜ், அறங்காவலா் சீதாலட்சுமி தங்கவேல், குமரப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து வரவேற்றனா்.
அதனை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியா்கள் பதிலுக்கு பொன்னாடை அணிவித்தனா். கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.