விஹெச்பி மாநாட்டில் கலந்துகொண்ட நீதிபதி! அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்!!
பொள்ளாச்சியில் 155 போ் கைது
பொள்ளாச்சியில் வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 155 போ் கைது செய்யப்பட்டனா்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடைபெற்ற வரும் தாக்குதலைக் கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் வசந்தராஜன் தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்றவா்கள் வங்கதேச ஹிந்துக்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனா்.
ஆா்ப்பட்டத்துக்கு காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் பொள்ளாச்சி ஏஎஸ்பி சிருஷ்டி சிங் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 30 பெண்கள் உள்பட 155 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.