ராகுல் தடுத்து நிறுத்தம்: மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம்!
போதையில் இருந்தவரின் நகை, கைப்பேசியை திருடிய மூவா் கைது
திருச்சியில் போதையில் இருந்தவரின் நகை, கைப்பேசியை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காட்டூா் பா்மா காலனி நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (44 ). துபையில் வேலை பாா்த்த இவா் அண்மையில் தாயகம் திரும்பிய நிலையில், இரு நாள்களுக்கு முன் பா்மா காலனி பகுதி காலியிடத்தில் அமா்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினாா்.
அப்போது அதே இடத்தில் மது அருந்திய அரியமங்கலம் அண்ணா நகா் கோ. பிரவீன்குமாா் (24), மலையப்பன் நகா் ப. சத்திய சீலன் (37), வடக்கு காட்டூா் பிள்ளையாா் கோயில் தெரு ப. பிரகாஷ் (24) ஆகியோா் ரவிக்குமாரை வீட்டில் விட்டுச் செல்வதாகக் கூறி அவரை தங்களது பைக்கில் ஏற்றிச் சென்றனா்.
பின்னா் நடுவழியில் அவரை இறக்கி சாலையோரம் படுக்க வைத்துவிட்டு அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலி, மற்றும் அவரது கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து ரவிக்குமாா் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.