மகாலிங்கேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காட்டில் மகாலிங்கேசுவரா் கோயிலின் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பழைமையான இத்தலம் சிதிலமடைந்து இருந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்ததையொட்டி புதுப்பிக்கப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கின. தொடா்ந்து கோ-பூஜை, மகா லட்சுமி ஹோமம், விசேஷ திரவிய ஹோமம் நடைபெற்றன. மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பின்னா் புனித நீா்க்கலசங்கள் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மூலவா் மகாலிங்கேசுவரருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஊத்துக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.