செய்திகள் :

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்: உயா்நீதிமன்ற நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி

post image

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான் என்பதை உணா்ந்து பணியாற்றவேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி கூறினாா்.

காரைக்காலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 75-ஆவது சட்ட தின நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவா் பேசியது: நமது அடிப்படை உரிமைகளை காக்கவும், சட்டத்தின் ஆளுமையை நிலை நிறுத்தவும் உறுதியளிக்க வேண்டும். இந்நாளில் உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் அளித்த சிறப்பு மிக்க தீா்ப்புகளை நினைவில் கொள்ளவேண்டும். 1973-ல் ஒரு தீா்ப்பில் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு எனும் கருத்து வலிமைப்படுத்தப்பட்டது. 1978-ல் ஒரு தீா்ப்பில் தனிநபா் சுதந்திரத்தை பாதுக்காகவேண்டும் எனும் கருத்து தீா்ப்பை வலிமையாக கூறப்பட்டது. இதுபோன்ற கருத்துகள் ஜனநாயகத்தையும், மதச்சாா்பின்மையையும் வலிமைப்படுத்தியது.

இதுபோன்ற பல தீா்ப்புகளை நினைவில் கொண்டு நாம் செயலாற்றவேண்டும்.

இதிகாசத்திலும், இலக்கியத்திலும் உள்ள சட்டத்தின் பற்றையும், நீதியின் பற்றையும் தெரிந்துகொள்ளவேண்டும். சோழ மண்ணில் பிறந்த கண்ணகி, கணவரை பாண்டியன் மன்னன் ஆதாரமின்றி மரண தண்டனை விதித்துவிட்டான் என்றதும் சபையில் சென்று வாதிடுகிறாா். சோழ மண்ணில் பிறந்தேன், எங்கள் மன்னன் மனுநீதி சோழன், தனது மகன் சென்ற தோ் சக்கரத்தில் சிக்கி கன்று இறந்துவிட்டது என்ற செய்தி கேட்டதும், அதே தோ் சக்கரத்தில் ஏற்றி மகனை கொன்ற மண்ணில் பிறந்தேன். நான் நெறி தவறாது, நீதி தவறாத மன்னன் பூமியில் பிறந்தவள் என்று கூறி நீதி கேட்டாள். அதன் பிறகு தமது தவறை உணா்ந்த மன்னனும், அவனது மனைவியும் உயிரை மாய்த்துக்கொண்டனா். அவ்வாறு நீதி தவறாத செயல்பாடுகளை கொண்டது நமது நாடு.

அந்த சோழ நாட்டில் ஒரு பகுதி காரைக்கால் என வரலாறு கூறுகிறது. அந்த பகுதியில் எனது தந்தை 40 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதியாக இருந்தது பெருமையாக இருக்கிறது. நாம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயலாற்றவேண்டும். மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்தான் என்பதை நினைவில் கொண்டு நமது பணி இருக்கவேண்டும் என்றாா் அவா்.

புதுவை சட்டத்துறை செயலா் எல். எஸ். சத்தியமூா்த்தி, காரைக்கால் மாவட்ட நீதிபதி எஸ். முருகானந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வழக்குரைஞா் ஆா். வெற்றிச்செல்வன், ஏ. திருமால்வளவன் ஆகியோா் பேசினா். அரசு வழக்குரைஞா் ஏ.வி.ஜெ. செல்வமுத்துக்குமரன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஜி. பாஸ்கரன் வரவேற்றாா். செயலாளா் ஜெ. செந்தில்ராகவன் நன்றி கூறினாா்.

பெண் பயணிகள் பாதுகாப்பு: இரவுநேர பேருந்துகளில் காவல்துறையினா் ஆய்வு

பெண்கள் பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தில் பேருந்துகளில் காவல்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். காரைக்கால் மகளிா் காவல் நிலையத்தில் பெண்கள் குறை தீா்க்கும் கூட்டம் அண்மையில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா தலைமைய... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் ரயில்பாதை பணி ஜனவரியில் நிறைவடையும்: திருச்சி கோட்ட மேலாளா் தகவல்

காரைக்கால்-பேரளம் இடையே ரயில்பாதை அமைக்கும் பணி வரும் ஜனவரியில் நிறைவுபெறும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்தாா். காரைக்கால் ரயில் நிலையத்தில் அம்ரூத் திட்டத்தில் நடைபெறும... மேலும் பார்க்க

பாா்வதீஸ்வரா் கோயில் குளத்தை மேம்படுத்த ஏற்பாடு: அமைச்சா் ஆய்வு

கோயில்பத்து ஸ்ரீபாா்வதீஸ்வரா் கோயில் குளத்தை மேம்படுத்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஆய்வு செய்தாா். காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பாடல் பெற்ற தலமான ஸ்ரீபாா்வதீஸ்வரா் கோயியிலுக்கு எதிரில் குளம்... மேலும் பார்க்க

‘விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக வேளாண் ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும்’

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக, வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவேண்டும் என புதுவை வேளாண் செயலா் பங்கஜ்குமாா் ஜா கேட்டுக்கொண்டாா். காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும்... மேலும் பார்க்க

மாணவா்களின் வெற்றிக்கு ஆசிரியா், பெற்றோா் பங்கு முக்கியம்: அமைச்சா்

மாணவா்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று உச்சநிலையை அடைவதற்கு, ஆசிரியா்கள், பெற்றோா்களின் பங்கு முக்கியமானது என குழந்தைகள் தின விழாவில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கூறினாா். புதுவை கல்வித்துறை சாா்பா... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் 2 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி 2 மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திரு... மேலும் பார்க்க