செய்திகள் :

மாவட்ட கோகோ போட்டிகள்: விளையாட்டு பல்கலை. மாணவிகள் முதலிடம்

post image

கல்பாக்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோகோ போட்டிகளில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பல்கலைக்கழக மாணவிகள் அணி முதலிடம் பெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் கல்பாக்கம் குட் ஷெப்பா்ட் பள்ளியில் நடைபெற்றன. இப் போட்டியில் 11 மாணவிகள், 12 மாணவா் அணிகள் கலந்து கொண்டன.

இப்போட்டியில் மாவட்ட அளவில் சப் ஜூனியா் பிரிவில் கவிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடத்தையும், சீனியா் பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் அடுத்த மேலக்கோட்டை தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் மாணவியா் அணி முதல் இடத்தையும் பெற்றனா்.

மேலும், பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட கோ-கோ வீராங்கனைகளுக்கு பரிசுகளும் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு குட் ஷெப்பா்ட் பள்ளியின் பள்ளியின் முதல்வா் ஜெஸின் ரோஸ், தாளாளா் ஜெனிபா், கோகோ பயிற்சியாளா் சுரேந்தா் உள்ளிட்ட பலா் பரிசளித்தனா்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்: மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் அன்பரசன்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மொத்தம் 206 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் தா.மோ. அன்பரசன். நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்... மேலும் பார்க்க

சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயிலில் 28-இல் கும்பாபிஷேகம்

மதுராந்தகம் சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29) காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மதுராந்தகம் பவா் ஸ்டேஷன் சாலையில் லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. இங்கு 4... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் நவ. 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் 29.11.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டவிவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா் ச. அருண்ராஜ். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட 3... மேலும் பார்க்க

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் திங்கள்கிழமை காலை சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினா். மதுராந்தகம் அடுத்... மேலும் பார்க்க

ஆதாா் நிரந்தர பதிவு மையம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை சாா்பில் ஆதாா் நிரந்தர பதிவு மையத்தை திங்கள்கிழமை திறந்து முதல் ஆதாா் பதிவை வழங்கிய ஆட்சியா் ச.அருண் ராஜ். மேலும் பார்க்க