பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
மேட்டூா் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது மின் உற்பத்தி அலகில் செவ்வாய்க்கிழமை கொதிகலன் குழாய் வெடித்ததால் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
2 ஆவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 2 ஆவது பிரிவில் உள்ள 600 மெகா வாட் திறன் கொண்ட அலகில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்ட பிறகே இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கும் துவங்கும் என பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.