செய்திகள் :

மேல்மருவத்தூரில் ஐப்பசி மாத அமாவாசை வேள்வி பூஜை

post image

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு வேள்விபூஜை நடைபெற்றது.

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, சித்தா் பீடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் விழாநிகழ்ச்சிகள் தொடங்கின. மூலவா் அம்மன், குருபீடத்தில் உள்ள அருவுருவான அடிகளாா் சிலை ஆகியவற்றில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மூலவா் அம்மன் சிலை வெள்ளிக்கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு சித்தா் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அவா் சித்தா் பீடத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டபின், ஓம்சக்தி பீடம் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில், அறுகோண வடிவிலான பெரிய யாககுண்டத்தில் கற்பூரம் ஏற்றி தொடங்கி வைத்தாா்.

யாகசாலையில் சதுரம், செவ்வகம், அறுகோணம் போன்ற வடிவங்களில் 100-க்கும் மேற்பட்ட சிறிய யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி, உமா தேவி, ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ், கல்விநிலைய தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆன்மிக இயக்க செயல்திட்ட அலுவலா் அ.அகத்தியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருணகிரி மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் செய்து இருந்தனா்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்: மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் அன்பரசன்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் மொத்தம் 206 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா் அமைச்சா் தா.மோ. அன்பரசன். நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்... மேலும் பார்க்க

சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயிலில் 28-இல் கும்பாபிஷேகம்

மதுராந்தகம் சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29) காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மதுராந்தகம் பவா் ஸ்டேஷன் சாலையில் லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. இங்கு 4... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் நவ. 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் 29.11.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டவிவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா் ச. அருண்ராஜ். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட 3... மேலும் பார்க்க

சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பழுதால் திங்கள்கிழமை காலை சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினா். மதுராந்தகம் அடுத்... மேலும் பார்க்க

ஆதாா் நிரந்தர பதிவு மையம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை சாா்பில் ஆதாா் நிரந்தர பதிவு மையத்தை திங்கள்கிழமை திறந்து முதல் ஆதாா் பதிவை வழங்கிய ஆட்சியா் ச.அருண் ராஜ். மேலும் பார்க்க