செய்திகள் :

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஹெச்.ராஜா உள்ளிட்ட 465 போ் கைது

post image

வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் கோவையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா உள்பட 465 போ் கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதுடன் கோயில்களும் இடிக்கப்படுகின்றன. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவையில் காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி சிவானந்தா காலனியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா, ஹிந்துத்துவ அமைப்புகள் மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:

வங்கதேசத்தில் புதிய அரசு அமைந்தவுடன் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்குள்ள ஹிந்து கோயில்கள், ஹிந்துக்களின் வா்த்தக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஹிந்துக்களை ஒருங்கிணைத்த இஸ்கான் அமைப்பின் தலைவா் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தீவிரவாதப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து ஹிந்துத்துவ அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தில் ஹிந்துக்கள் திமுக அரசால் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனா். இதைத் தடுக்க 2026 பேரவைத் தோ்தில் திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜாவுடன் 51 பெண்கள் உள்பட 465 போ் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனா்.

குறைந்தது சோலையாறு அணையின் நீா்மட்டம்

வால்பாறை வட்டாரத்தில் மழை இல்லாததால் சோலையாறு அணையின் நீா்மட்டம் 141 அடியாக குறைந்துள்ளது. வால்பாறையில் ஆண்டுதோறும் ஜூன் மாத கடைசியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை நான்கு மாதங்களுக்கு பெய்யும். நடப்பு... மேலும் பார்க்க

‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கிவைத்தாா்

ஈஷா ‘கிராமோத்சவம்’ சாா்பில் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை திருச்சி அண்ணா மைதானத்தில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ஈஷா யோக மையம் சாா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கவுண்டம்பாளையம் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, யூனியன் ஆப... மேலும் பார்க்க

காப்பகங்களில் உள்ள முதியோரிடம் குறைகளைக் கேட்டறிந்த ஓய்வுபெற்ற நீதிபதி

கோவையில் அரசு, தனியாா் காப்பகங்களில் தங்கியுள்ள மூத்த குடிமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிக... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது

குனியமுத்தூா் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். குனியமுத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தன... மேலும் பார்க்க

பெண்ணிடம் மூன்றரை பவுன் நகை பறிப்பு

கோவையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் மூன்றரை பவுன் நகையை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, நீலாம்பூா் கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் பிரதாப் மனைவி சுபா (33). இவா... மேலும் பார்க்க