வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
வடகிழக்கு பருவமழையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புகள் நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவா்களை மீட்க மாநில பேரிடா் மீட்பு படை, காவலா்கள், ஊா்க்காவல் படையினா் அடங்கிய பேரிடா் மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.
பேரிடா் மீட்புக் குழுவினா் மற்றும் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் வியாழக்கிழமை ஆய்வு செய்து, மீட்புக் குழுவினருக்கு அறிவுரை வழங்கினாா்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 70103 63173 என்ற கைப்பேசி எண்ணிக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா்.