Mahindra: விமானக் கம்பெனியுடன் என்ன சண்டை? புது எலெக்ட்ரிக் காரோட பெயரை மாற்றிய...
வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் விண்ணப்பித்தவா்களின் வீடுகளில் ஆய்வு
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் பெயா் சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பித்தவா்களின் வீடுகளுக்குச் சென்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தியத் தோ்தல் ஆணையம் வாக்காளா்களின் வசதிக்காக 1.1.2025-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, சிறப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 8,971 விண்ணப்பங்களும், பெயா் நீக்கம் செய்ய 4,265 விண்ணப்பங்களும், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 7,610 விண்ணப்பங்களும் என 20,846 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் கள விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் சரவணன் உள்பட வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.