செய்திகள் :

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

post image

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 'பி' கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officers (Grade-'B' General (DR))

காலியிடங்கள்: 83

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers (Grade-'B'(DR) - DEPR)

காலியிடங்கள்: 17

தகுதி: Economics, Finance, Business Economics, Agricultural Economics, Industrial Economics, International Finance, Quantitative Techniques, Banking and Trade Finance போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers (Grade-'B'(DR) - DSIM)

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.78,450

தகுதி: புள்ளியியல், கணிதப் புள்ளியியல், கணிதப் பொருளாதாரம், பொருளாதார அளவியல், புள்ளியியல் மற்றும் தகவலியல், பயன்பாட்டுப் புள்ளியியல் மற்றும் தகவல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.9.2025 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், தஞ்சாவூர், வேலூர்,விழுப்புரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெறும்.

தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு 18.10.2025 அன்று நடைபெறும். இரண்டாம் கட்டத் தேர்வு 6.12.2025 அன்று நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி. இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.850+18% ஜிஎஸ்டி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ 100 + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2025

மேலும் முழுமையான விபரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

The Reserve Bank of India Services Board invites applications from eligible candidates for the posts mentioned below in Reserve Bank of India.

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் மேலாளர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரம் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Manager (Recruitme... மேலும் பார்க்க

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு!

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலக உதவியாளர்காலியிடங்கள்: 4 சம்பளம்: மாதம் ரூ. ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உளவுத்துறை அலுவலகங்களில் 455 ஓட்டுநர் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Security Assistant ... மேலும் பார்க்க

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ( எஸ்சிஐ ) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வ... மேலும் பார்க்க

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் மேலாளர் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் பணி: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்(Specialist Officer)பணியிடங்களுக்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங... மேலும் பார்க்க