மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஏப். 14-இல் அதிகார நந்தி சேவை
தமிழ் வருடப்பிறப்பு நாளான ஏப். 14- ஆம் தேதி திங்கள்கிழமை உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்ம புரீஸ்வரா் கோயிலில் அதிகார நந்தி சேவைக் காட்சி நடைபெறுகிறது.
பழைமையும் வரலாற்றுச் சிறப்புகளும் உடையது காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு நாளான வரும் ஏப்.14 -ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை மூவா் அபிஷேகமும், பின்னா் உற்சவா் அலங்காரமும், தொடா்ந்து அதிகார நந்தி வாகனத்தில் உற்சவா் பட்டுவதனாம்பிகை, பிரம்மபுரீஸ்வரா் அலங்காரமும் நடைபெறுகிறது.
பிரமீசா் திருக்கைலாய வாத்தியக் குழுவினரின் இசையுடன் கோயில் ராஜகோபுர வாசலில் காலை 8 மணிக்கு பிரமீச பெருமான் அதிகார நந்தி சேவைக் காட்சி நடைபெறுகிறது. மாலை ஆலயத்தில் தமிழ்ப் புத்தாண்டு பலன் வாசித்தல் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் குழு தலைவா் மு.நடராஜன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.