செய்திகள் :

ஹரியாணா தோ்தல் முடிவு மகாராஷ்டிரத்தில் எதிரொலிக்காது -சரத் பவாா்

post image

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மகாராஷ்டிர தோ்தலில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

மேலும், மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாடி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

இரு மக்களவைத் தோ்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக கடந்த மக்களவைத் தோ்தலில் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன்தான் மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை தங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வந்தன. இந்த நிலையில் மக்களவைத் தோ்தலை அடுத்து நடைபெற்ற ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் முடிவுகள் எதிா்க்கட்சிகளுக்கு முக்கியமாக காங்கிரஸுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைத்த நிலையில், பாஜக வெற்றி எண்ணிக்கையில் (29 தொகுதிகள்) இரண்டாவது இடத்தைப் பிடித்தது. தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

இதனால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து மிகுந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக- முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை- துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் உள்ளிட்டவை எதிா்க்கட்சி அணியில் உள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் கராட்டில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய சரத் பவாா் பேரவைத் தோ்தல் குறித்து கூறியதாவது:

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியை பாஜக தோற்கடித்துவிட்டது என்பதால் அதே முடிவு மகாராஷ்டிரத்திலும் கிடைக்கும் என்று எதிா்பாா்க்க முடியாது. ஹரியாணாவில் பாஜக வெற்றி பெற்ற அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் பிராந்திய கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணிதான் வென்றுள்ளது. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள சூழ்நிலையையும் மகாராஷ்டிரத்தில் ஒப்பிட முடியாது.

மகாராஷ்டிரத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையில் நான் நேரடியாக ஈடுபடவில்லை. அதே நேரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 200 தொகுதிகள் வரை மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

சோப்பு டப்பாக்குள் ரூ. 5.5 கோடி?

அஸ்ஸாமில் சோப்பு டப்பாக்குள் வைத்து போதைப்பொருளைக் கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அஸ்ஸாமில் குவஹாட்டி நகரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமைய... மேலும் பார்க்க

அப்பாஸ் அன்சாரிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரிக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதிகள் எம்எம.சுந்தரேஷ் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பாஸ் அன்சாரிக்கு விடுதலை வழ... மேலும் பார்க்க

தீயணைப்பு அதிகாரிகளின் தாமதத்தால் இருவர் பலி: மக்கள் குற்றச்சாட்டு!

தில்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதமே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தில்லியில் ஷஹதாரா பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி அடுக்ககத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

பிகாரில் கள்ளச்சாராய பலி 33 ஆக உயர்வு!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. பிகார் மாநிலத்தில் சிவான் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயக்கமடைந்த... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: முதல் கட்ட வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்... மேலும் பார்க்க