அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் தில்லியில் தொடங்கியது.
இதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
நாளை முதல் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி தில்லியில் இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.