செய்திகள் :

அற்புதமான மனிதர்! ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள்: சாய்ரா பானு

post image

ஏ. ஆர். ரஹ்மான் குறித்து சாய்ரா பானு பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக தனித்தனியாக அறிவித்ததும், இவர்களது தரப்பிலிருந்து வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியானது.

சினிமாத் துறையில் இருந்தாலும் பலரிடம் மேன்மையானவர் என்கிற பெயரைப் பெற்ற ரஹ்மானுக்கு விவாகரத்து என செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன் இருக்கின்றனர்.

மேலும், தன் விவாகரத்து குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஏ. ஆர். ரஹ்மான் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: அவதூறு விடியோக்களை நீக்க வேண்டும்: ஏ.ஆர். ரஹ்மான் நோட்டீஸ்!

இந்த நிலையில், ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், “அனைவருக்கும் வணக்கம். சில மாதங்களாக என் உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் வசித்தபடி சிகிச்சை எடுத்து வருகிறேன். என் உடல் நலம் காரணமாகத்தான் மும்பை வந்தேன். ஏ. ஆர். ரஹ்மானிடமிருந்து விலகி இருக்க இதுதான் காரணம். அனைத்து யூடியூபர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினரிடம் கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து ஏ. ஆர். ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.

அவர் உலகின் சிறந்த ஆண். அற்புதமான மனிதர். அவரை நான் முழுவதும் நம்புகிறேன். ரஹ்மான் பட வேலைகளால் சென்னையில் பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவரையும் என் குழந்தைகளையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இதுவரை, அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை. சிகிச்சை முடிந்ததும் விரைவில் சென்னை வருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 40,000 திரைகளில் மகாராஜா!

’இதுவரை, அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை' என குறிப்பிட்டிருப்பது விவாகரத்து தொடர்பாக எடுத்த முடிவை மாற்றுவதற்கான யோசனையில் சாய்ரா பானு இருப்பதாகவும் தெரிகிறது.

ஜெயிலர் - 2 புரமோ படப்பிடிப்பு பணிகள் துவக்கம்?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் - 2 படத்தின் புரமோ படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகத் தகவல்.நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.28-11-202 வியாழக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு ந... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா

சையது மோடி இந்தியா இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோா் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனா்.மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில... மேலும் பார்க்க

ஆசிய ஜூனியா் ஹாக்கி: தாய்லாந்தை திணறடித்த இந்தியா

ஓமனில் புதன்கிழமை தொடங்கிய ஜூனியா் ஆடவா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை திணறடித்து வென்றது.இந்த ஆட்டத்தில் முதல் பாதியிலேய... மேலும் பார்க்க

ஏ.எல். முதலியாா் தடகளப் போட்டி: 2-ஆவது நாளாக புதிய சாதனைகள் படைப்பு

சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 56-ஆவது ஏ.எல். முதலியாா் தடகளப் போட்டியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 48 கல... மேலும் பார்க்க

புரோ கபடி லீக்: புணேயில் 11 பிளே ஆஃப், இறுதி ஆட்டம்

புரோ கபடி லீக் தொடரின் இறுதிக் கட்ட ஆட்டங்கள் புணேயில் நடைபெறவுள்ள நிலையில், 11 பிளே ஆஃப் ஆட்டங்கள் மற்றும் இறுதி ஆட்டமும் டிச. 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. புரோ கபடி லீக் தொடரின் முதல் கட்... மேலும் பார்க்க