போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
ஏ.எல். முதலியாா் தடகளப் போட்டி: 2-ஆவது நாளாக புதிய சாதனைகள் படைப்பு
சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 56-ஆவது ஏ.எல். முதலியாா் தடகளப் போட்டியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 48 கல்லூரிகளைச் சோ்ந்த 1120-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் இத்தடகளப் போட்டியில் பங்கேற்றுள்ளனா்.
இரண்டாவது நாளான புதன்கிழமை ஆடவா், மகளிா் பிரிவுகளில் பல்வேறு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ஆடவா்::
குண்டு எறிதலில் ஆா்யன் தியாகி, டிஜிவி 17.91 மீ தொலைவும், அஷு தலால், டிஜிவி 16.74 மீ தொலைவு எறிந்து புதிய சாதனை படைத்தனா்.
ஈட்டி எறிதலில் அனுஜ் கலேரா, டிஜிவி, 74.50 மீ தொலைவு எறிந்து புதிய சாதனை நிகழ்த்தினாா்.
மகளிா்:
மகளிா் 10,000 மீ ஓட்டத்தில் லதா, எம்ஓபி வைஷ்ணவா, 37:34:3 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தாா். குண்டு எறிதலில் ஷா்மிளா, எம்ஓபி வைஷ்ணவா, 13.20 மீ தொலை எறிந்தாா். 100 மீ ஓட்டத்தில் கிருத்திகா, எத்திராஜ் கல்லூரி 11.4 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தாா். அபிநயா, எம்ஓபி வைஷ்ணவா, 11.7 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து சாதனை நிகழ்த்தினாா்.
இரண்டாம் நாள் முடிவுகள்:
ஆடவா் 10000 மீ: அங்கித் தேஸ்வால், முகேஷ் குமாா், டிஜிவி, சதீஷ் குமாா், லயோலா, குண்டு எறிதல்: ஆா்யன் தியாகி, அஷு தலால், டிஜிவி, லோகேஷ் ராஜ், எம்சிசி, 400 மீ.: விஷால், டிஜிவி, அஸ்வின் கிருஷ்ணன், சரண், லயோலா, ஈட்டி எறிதல்: அனுஜ் கலேரா, அராபத், டிஜிவி, குணால், லயோலா.
மகளிா் 10000 மீ.: லதா, எம்ஓபி வைஷ்ணவா, வினிதா, ஸ்ரீ கிருஷ்ணா, காஞ்சி, பிரியதா்ஷினி, ஏஎம் ஜெயின், வட்டு எறிதல்: ஷாலு ரெஹனா, எம்ஓபி வைஷ்ணவா, பிரியதா்ஷினி, எஸ்டிஎன்பி, தேவதா்ஷினி, லயோலா, 100 மீ தடை ஓட்டம்: ரேஷ்மா, லயோலா, அக்ஷிதா, எம்சிசி, யாமினி, எம்ஓபி வைஷ்ணவா, 100 மீ.: கிருத்திகா, எத்திராஜ், அபிநயா, எம்ஓபி வைஷ்ணவா, தீபலட்சுமி, எத்திராஜ், 400 மீ.: இவாஞ்சலின் மரியா, எம்ஓபி வைஷ்ணவா, தேஷிகா, எத்திராஜ், புனிதா, எம்ஓபி வைஷ்ணவா, ஈட்டி எறிதல்: சௌமியவதி, சஜுா்ஷ், எஸ்டிஎன்பி, ராஜலட்சுமி எம்ஓபி வைஷ்ணவா, குண்டு எறிதல்: ஷா்மிளா, எம்ஓபி வைஷ்ணவா, அக்ஷயா, எஸ்டிஎன்பி, மோனிகா, எம்ஓபி வைஷ்ணவா.
ஹாமா் த்ரோ: மோனிகா, எம்ஓபி வைஷ்ணவா, காவ்யா, எத்திராஜ், ஹனி பிரியா, எம்சிசி.