செய்திகள் :

ஜெயிலர் - 2 புரமோ படப்பிடிப்பு பணிகள் துவக்கம்?

post image

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் - 2 படத்தின் புரமோ படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகத் தகவல்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.

இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.

இதையும் படிக்க: பிரதர் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்குப் பின் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைவதாகக் கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையில் ஜெயிலர் - 2 அறிவிப்பு விடியோவுக்கான செட் பணிகள் நடைபெற்று வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் பிறந்த நாளான்று ஜெயிலர் - 2 அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

ஓடிடியில் லக்கி பாஸ்கர்!

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகி... மேலும் பார்க்க

ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய லிவர்பூல்..! முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி!

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யுஇஎப்ஏ சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை லிவர்பூல் அணி வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என... மேலும் பார்க்க

தயாராகிறது 96 - 2!

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் கு... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.28-11-202 வியாழக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு ந... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா

சையது மோடி இந்தியா இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோா் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனா்.மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில... மேலும் பார்க்க

ஆசிய ஜூனியா் ஹாக்கி: தாய்லாந்தை திணறடித்த இந்தியா

ஓமனில் புதன்கிழமை தொடங்கிய ஜூனியா் ஆடவா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை திணறடித்து வென்றது.இந்த ஆட்டத்தில் முதல் பாதியிலேய... மேலும் பார்க்க