செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

post image

மேற்கு மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

சாங்லியில் வசிக்கும் கேடேகர்கள் மற்றும் நர்வேகர்கள் என்ற இரு குடும்பங்கள் கோலப்பூரில் நிகழ்ந்த திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 12.30 மணியளவில் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணா ஆற்றில் இரண்டு பாலங்கள் உள்ளன. பழைய பாலத்தின் வழியாக கார் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பாலங்களுக்கு இடையே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரசாத் பால்சந்திர கெடேகர் (35), அவரது மனைவி பிரேரனா (36) மற்றும் வைஷ்ணவி சந்தோஷ் நர்வேகர் (21) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் சமர்ஜீத் பிரசாத் கேடேகர் (7), வரத் சந்தோஷ் நர்வேகர் (19), சாக்ஷி சந்தோஷ் நர்வேகர் (42) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கான போலி ரூபாய் நோட்டு எண்ணிக்கை!

கடந்த 2018-19 மற்றும் 2023-24 க்கு இடையிலான காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த போலி ரூ.500 நோட்டுகள் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இது மட்டுமா? அண்மையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 2,000 ... மேலும் பார்க்க

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம்: 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள்!

பிரதமரின் தொழில் பழகுநர் (Internship) திட்டத்தில் 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.2024 - 2025க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம், தேர்ந்த... மேலும் பார்க்க

வயநாடு எம்.பி.யாக பதவியேற்றபோது பிரியங்கா அணிந்திருந்த கசவு புடவையின் ஆச்சரியம் தரும் பின்னணி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, இன்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.கேரள மாநில பாரம்பரி... மேலும் பார்க்க

மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு, நாளை பள்ளிகள் திறப்பு!

மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 29(நாளை) முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது. மேலும் பார்க்க

எந்தப் பங்குகளை வாங்கலாம்? சிறந்த 5 பங்குகள்!

தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட, இந்தியாவில் வாங்குவதற்கு 5 சிறந்த குறைந்த விலை பங்குகளாக பொருளாதார நிபுணர்கள் கூறுவது;வேகமாக வளர்ந்து வரும் பங்குகளும், அதன் வளர்ச்சி விகிதம... மேலும் பார்க்க

கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவதில் முன்மாதிரி என் தந்தை: ஸ்ரீகாந்த்

மகாராஷ்டிரத்தின் காபந்து முதல்வராக இருக்கும் எனது தந்தை ஏக்நாத் ஷிண்டே "கூட்டணி தர்மத்தைப்" பின்பற்றுவதில் முன்மாதிரியா இருப்பதற்காக பெருமைப்படுவதாக சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறினார். முன்னதாக ... மேலும் பார்க்க