தமிழ்ச் சமூகத் திருமணங்கள்: பொன் உருக்கு டு தாலி பெருக்குதல்... நாஞ்சில் நாட்டு ...
Subbaraju: 47 வயதில் திருமணம் செய்துகொண்ட பாகுபலிப் பட நடிகர்.. மணமகள் யார் தெரியுமா?
ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தைச் சேர்ந்தவர் நடிகர் சுப்பராஜூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவர், தமிழில் ஆர்யா, போக்கிரி, பில்லா உள்ளிட்டப் பல படங்களில், நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். பாகுபலி 2-வில் அனுஷ்காவின் மாமா கதாபாத்திரத்தில், காமெடியில் தொடங்கி, வீரமிக்கவராக மரணிக்கும் காட்சி வரை ரசிகர்களை அவரின் நடிப்பால் கட்டிப் போட்டிருப்பார். தொடர்ந்து சிலப் படங்களில் நடித்துவரும் சுப்பராஜுவுக்கு, தற்போது வயது 47.
இந்த நிலையில், அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் திருமணப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் திருமணக் கோளத்தில் சுப்புராஜுவும், அவரின் மனைவி ஷ்ரவந்தியும் இருக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. சுப்புராஜு திருமணம் செய்துகொண்ட ஷ்ரவந்தி தாபல், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் BDS, DDS மற்றும் MPH படித்து முடித்த பல் மருத்துவர். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இருவீட்டார் சம்மதத்துடன் இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் சுப்பாராஜு பகிர்ந்தப் புகைப்படம் வைலாகியிருக்கிறது.
இதற்கு முன்னர் நடிகர் சுப்பாராஜு அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்தக் கேள்விக்கு, ``திருமணம் தானாக நடக்க வேண்டும். இந்த சமூக அழுத்தத்துக்காகவோ, அல்லது வயது அதிகமாகிறது என்ற கரணத்துக்காகவோ திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அதுவாக அமையும்போது பார்க்கலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவர் திருமணம் செய்துக்கொண்ட இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!