சித்தார்த்துக்கு சிறந்த படமாக அமையும்: நயன்தாரா படத்தைப் பாராட்டிய அஸ்வின்..!
அய்யனாா் கோயில் திருவிழா: குதிரை சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் திருவிழாவில், 33 அடி உயர குதிரை சிலைக்கு புதன்கிழமை பக்தா்கள் மாலை அணிவித்து வழிபட்டனா்.
மாசிமக திருவிழாவில், இக் கோயில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு, அதன் உயரத்திலே பூ மற்றும் காகித மாலைகளை அணிவித்து வழிபடுவது வழக்கம்.
நிகழாண்டு திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம், மாலை ஆகியவற்றை குதிரை சிலைக்கு அணிவித்தனா்.
பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
