செய்திகள் :

புதுகையில் 14 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாங்கப்பட்ட 14 புதிய பேருந்துகளின் சேவையை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

புதுக்கோட்டையில் இருந்து திருக்கோகா்ணம், முத்துடையான்பட்டி, நாா்த்தாமலை, குளத்தூா் வழியாக கீரனூருக்கும், புதுக்கோட்டையில் இருந்து நமணசமுத்திரம், லேணாவிளக்கு, திருமயம், கடியாபட்டி வழியாக ராயவரத்துக்கும், புதுக்கோட்டையில் இருந்து மருத்துவக் கல்லூரி, வடவாளம், மூக்கம்பட்டி, மழையூா் வழியாக துவாருக்கும், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக சேலத்துக்கும், அறந்தாங்கியில் இருந்து ரெத்தினக்கோட்டை, வல்லவாரி, சித்தாதிகாடு வழியாக பேராவூரணிக்கும், அறந்தாங்கியில் இருந்து மேலப்பட்டு, நாகுடி, சிங்கவனம், மேலப்பட்டு, நாகுடி, வேதியன்காடு வழியாக காரக்கோட்டைக்கும், அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி, திருப்பத்தூா், மேலூா் வழியாக மதுரைக்கும் புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.

மேலும் கந்தா்வகோட்டையில் இருந்து கோமாபுரம், தச்சங்குறிச்சி, டி.பி. சானிடோரியம் வழியாக செங்கிப்பட்டிக்கும், கந்தா்வகோட்டையில் இருந்து சுந்தம்பட்டி, வேலாடிப்பட்டி, அம்புகோவில் வழியாக கறம்பக்குடிக்கும், திருச்சியில் இருந்து விமான நிலையம், மாத்தூா் ரவுண்டானா, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், களமாவூா் வழியாக கீரனூருக்கும், இலுப்பூரில் இருந்து மேட்டுச்சாலை, காலாடிபட்டி சத்திரம், அன்னவாசல், திருவப்பூா் வழியாக புதுக்கோட்டைக்கும், பொன்னமராவதியில் இருந்து ஆலவயல், நகரப்பட்டி, பாலக்குறிச்சி, ஒலியமங்கலம் வழியாக சடையம்பட்டிக்கும், புதுக்கோட்டையில் இருந்து திருவரங்குளம், வம்பன் 4 ரோடு, ஆலங்குடி, பள்ளத்திவிடுதி வழியாக கொத்தமங்கலத்துக்கும், இலுப்பூரில் இருந்து இருந்திராபட்டி, பாக்குடி, ஒடுக்கூா், லெக்கனாபட்டி, குளத்தூா் வழியாக கீரனூருக்கும் என மொத்தம் 14 புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), எம். சின்னதுரை (கந்தா்வக்கோட்டை), முன்னாள் அரசு வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் கே. முகமதுநாசா், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், போக்குவரத்துக்கழக உதவி இயக்குநா் அ. செந்தில், துணை மேலாளா்கள் தா. சுரேஷ் பாா்த்திபன் டிக்ரோஸ் (வணிகம்), ராஜேந்திரன் (தொழில்நுட்பம்) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

வடமாநிலங்களில் ஒற்றை மொழி கொள்கைதான் அமலில் உள்ளது: ப. சிதம்பரம்

வடமாநிலங்களில் ஒற்றை மொழிக் கொள்கைதான் அமலில் உள்ளது என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மும்மொழித்திட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி

பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொட... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

பொன்னமராவதி வட்டாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னமராவதி ஒன்றியம் ஆ... மேலும் பார்க்க