செய்திகள் :

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா?

post image

நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போவதாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷா லியோ, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லியில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி வைரலானார். அண்மையில், இவர் நடித்த மலையாளப் படமான ஐடெண்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சினிமா மட்டுமல்லாது சில தொழில்களிலும் முதலீட்டாளராக இருக்கும் த்ரிஷாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அது குறித்து கேள்விகளையும் மறுத்து வருகிறார்.

இதையும் படிக்க: ஆங்கிலத்திலும் தயாராகும் ஜெயிலர் - 2!

இந்த நிலையில், சில நாள்களாக த்ரிஷா நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. பல செய்தி நிறுவனங்களும் இதனைச் செய்தியாக வெளியிட்டன.

பின், த்ரிஷாவின் அம்மாவை தொடர்புகொண்டு அரசியலுக்கு த்ரிஷா வருவது உறுதியா? எனக் கேட்டதற்கு அவர், த்ரிஷா அரசியலுக்கு வரும் செய்தியில் உண்மையில்ல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் எனத் தெரிவித்தாராம்.

இதனால், த்ரிஷா அரசியலுக்கு வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நாள் உங்களுக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.28.01.2025மேஷம்இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதி... மேலும் பார்க்க

சிறந்த டெஸ்ட் வீரா் ஜஸ்பிரீத் பும்ரா!

2024-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா தோ்வாகியிருக்கிறாா். ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக இந்திய பேட்டா் ஸ்மிருதி மந்த... மேலும் பார்க்க

ஐசிசி டி20 அணியில் மந்தனா, ரிச்சா, தீப்தி

மகளிா் டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியவா்களுக்கான ஐசிசி அணியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தீப்தி சா்மா ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.இதில் மந்தனா ஏற... மேலும் பார்க்க

இங்கிலாந்துடன் இன்று 3-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது.5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று த... மேலும் பார்க்க

முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 120 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்ற நிலையில், 2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் 1-1 என ச... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா - குகேஷ் ‘டிரா’

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - டி.குகேஷ் மோதல் ‘டிரா’வில் முடிந்தது.இதர இந்தியா்களில், லியோன் லூக் மெண்டோன்கா - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ... மேலும் பார்க்க