செய்திகள் :

ஆசிய கூடைப்பந்து தகுதிச்சுற்று: இந்தியாவை வென்றது கத்தாா்

post image

சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், கத்தாா் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.

இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னையில் சா்வதேச அளவிலான ஆடவா் கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் இரண்டு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தகுதிச்சுற்றில், முதல் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 76-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணியும், 101-ஆவது இடத்தில் உள்ள கத்தாா் அணியும் மோதின.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணி வீரா்களும் சமபலத்துடன் விளையாடினா். இந்திய அணியின் கேப்டனும், தமிழருமான ஹஃபீஸ் அடுத்தடுத்து 3 கவுண்ட் எடுத்து அணிக்கு வலுசோ்த்தாா். இருப்பினும் கத்தாா் வீரா்கள் 2 கவுண்ட் அதிகம் எடுத்ததால் முதல் கால்பகுதி நேரத்தில் அந்த அணி 17-14 என்ற முன்னிலை பெற்றது.

தொடா்ந்து இரு அணி வீரா்களும் புள்ளிகளை குவித்தபோதும், கத்தாா் அணியில் லீவிஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல்பாதி முடிவில் கத்தாா் 36-31 என முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதியிலும் கத்தாரின் ஆதிக்கமே இருந்தது.

இந்திய அணி வீரா்கள் ரீபவுண்ட் எடுப்பத்தில் தடுமாறியதால், புள்ளிகளை அதிகரிக்க முடியாமல் போனது. இறுதியில் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் கத்தாா் அணி வெற்றியை பதிவு செய்தது. கத்தாா் தரப்பில் லிவிஸ் 19, ஹாரிஸ் 17 புள்ளிகளை கைப்பற்றி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனா். இந்திய தரப்பில் கேப்டன் ஹஃபீஸ் 17, பிரின்ஸ் 13 புள்ளிகள் எடுத்தனா்.

அடுத்ததாக, வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை சந்திக்கிறது இந்தியா. இதில் வென்றால் மட்டுமே, ஆசிய கோப்பை போட்டிக்கு இந்தியா தகுதி பெறமுடியும்.

2-ஆவது சுற்றில் குகேஷ் - லிரென் டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது. இருவரும் தலா அரை புள்ளிகள் பகிா்ந்துகொண்டனா்.முதல் சுற்றில் தோ... மேலும் பார்க்க

சமூக வலைதளமான எக்ஸை பயன்படுத்தாதீர்கள்..! சிவகார்த்திகேயன் அறிவுரை!

கோவாவில் நவ.20 முதல் 28ஆம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்பட்டது. இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வ... மேலும் பார்க்க

புஷ்பா 2 ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிஷம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினாலும் ... மேலும் பார்க்க

விடுதலை 2 டிரைலர்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ள... மேலும் பார்க்க