செய்திகள் :

ஆன்லைன் வா்த்தகம் எனக் கூறி ரூ.19 லட்சம் மோசடி: சென்னை இளைஞா் கைது

post image

அரியலூரில் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் எனக் கூறி ரூ. 19 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சோ்ந்த இளைஞரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அரியலூா் நகரத்தைச் சோ்ந்தவா் சுந்தா் (43). கைப்பேசி, முகநூல், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் வழியே இவரைத் தொடா்பு கொண்ட நபா், அவரது கைப்பேசிக்கு லிங்கை அனுப்பி போரேக்ஸ் டிரேடிங்-இல் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.19,76,480-ஐ முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியுள்ளாா்.

இதுகுறித்து சுந்தா் அளித்த புகாரின்பேரில், அரியலூா் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிந்து, குற்ற செயலுக்காகப் பயன்படுத்திய வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 8,66,966 முடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விசாரணையில், சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் சக்திவேல் (36) என்பவா் மோசடியில் ஈடுபட்டிருப்பதும், சக்திவேலுக்கு கா்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கி பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா தலைமையில் 5 போ் கொண்ட காவல் துறையினா், சென்னையில் சக்திவேலைக் கைது செய்து சனிக்கிழமை அரியலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் சக்திவேலிடமிருந்து 3 கைப்பேசிகள், 9 சிம்காா்டுகள், 7 காசோலை புத்தகங்கள், 7 ஏடிஎம் காா்டுகள், 7 ஆபீஸ் ‘சீல்’ உள்ளிட்டவைகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

நூறு நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிலுப்பனூா் கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்டப் பணிகளை முறையாக வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.படவிளக்கம்: சிலுப்பனூரில் 100 நாள் வ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் நவ.23-இல் கிராமசபை கூட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நவ.23) கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்தக் கிராமசப... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீா் முகாம்

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் புகாா்களை கேட்டறிந்த அவா்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆசிரியா் போக்சோவில் கைது

அரியலூா் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா் ‘போக்சோ’ சட்டத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அரியலூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் ராஜீவ்காந்தி... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா, சாவா போன்றது: கே.பி.முனுசாமி

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா போன்றது என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி. அரியலூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கள ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் ஆட்சியரகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நில ஒருங்கிணைப்புச் சட்டத்... மேலும் பார்க்க