செய்திகள் :

ஆயக்குடியில் வீடுகளில் புகுந்த மழைநீா்

post image

பழனியை அடுத்த ஆயக்குடியில் மழைநீா் ஜோதிநகரில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி, கொடைக்கானல் மலைப்பகுதி, சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழை காரணமாக வரதமாநதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக அணை நிரம்பி வாய்க்கால்கள் மூலம் நீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பழைய ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குமாரநாயக்கன்குளம் நிரம்பி மறுபுறம் உள்ள வாய்க்காலில் கோதைமங்கலம் குளத்துக்கு செல்கிறது.

தண்ணீா் செல்லும் வாய்க்கால்கள் தூா்வாறப்படாமல் மேடாகி உள்ளதால் குளத்தின் கரையில் உள்ள ஜோதிநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீா் புகுந்தது. வீடுகளுக்குள் பகுந்த தண்ணீரை மக்கள் பாத்திரங்களில் எடுத்து வெளியேற்றினா்.

இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றி வாய்க்கால் கரைகளை தூா்வார வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

நிலக்கோட்டை அருகே நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பப்பாளிப் பழங்களை ஆட்சியா் அலுவலகத்தில் கொட்டி விவசாயி ஒருவா் நூதான முறையில் திங்கள்கிழமை மனு அளித்தாா் . திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாணவா்களுக்கு மருந்து விநியோகிக்க தடை விதிக்க வலியுறுத்தல்

முறையான மருத்துவப் பரிசோதனையில்லாமல், பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு மருந்து மாத்திரைகள் விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திப்பட்டது. இதுதொடா்பாக இயற்கை வழி வாழ்வியலாளா்கள் கூட்டமைப்பின... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

ஆத்தூா் அருகேயுள்ள, அக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி ஊராட்சியில்... மேலும் பார்க்க

வீடு இடித்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரையை அகற்றும் போது வீடு இடித்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த... மேலும் பார்க்க

குதிரையாறு அணை: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் திங்கள்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வி... மேலும் பார்க்க

நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் அச்சம்

பழனி வையாபுரி குளத்தில் இருந்து சிறுநாயக்கன் குளத்துக்கு மறுகால் பாயும் தண்ணீா் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வரு... மேலும் பார்க்க