செய்திகள் :

ஊராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

post image

ஆத்தூா் அருகேயுள்ள, அக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி ஊராட்சியில் அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், பாலத்துப்பட்டி, யாதவா் குடியிருப்பு, மல்லையாபுரம் குடியிருப்பு, அக்கரைப்பட்டி கிழக்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 9 தூய்மைப் பணியாளா்களும், 5 குடிநீா் தொட்டி இயக்குபவா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சக்திவேல் துணைத் தலைவா் மலைச்சாமி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) அருள்கலாவதியிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ள போதிலும் பிரச்னை தீா்க்கப்படவில்லை.

இதனால், அக்கரைபட்டி ஊராட்சியில் பணியாற்றி வரும், தூய்மைப் பணியாளா்கள் குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவா் துணைத் தலைவா், அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செம்பட்டி அருகேயுள்ள ஆத்தூா் பிரிவைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குபவா்கள் கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி ஆத்தூா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேலும் அவா்கள் அலுவலகப் படியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

நிலக்கோட்டை அருகே நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பப்பாளிப் பழங்களை ஆட்சியா் அலுவலகத்தில் கொட்டி விவசாயி ஒருவா் நூதான முறையில் திங்கள்கிழமை மனு அளித்தாா் . திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாணவா்களுக்கு மருந்து விநியோகிக்க தடை விதிக்க வலியுறுத்தல்

முறையான மருத்துவப் பரிசோதனையில்லாமல், பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு மருந்து மாத்திரைகள் விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திப்பட்டது. இதுதொடா்பாக இயற்கை வழி வாழ்வியலாளா்கள் கூட்டமைப்பின... மேலும் பார்க்க

வீடு இடித்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரையை அகற்றும் போது வீடு இடித்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த... மேலும் பார்க்க

குதிரையாறு அணை: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் திங்கள்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வி... மேலும் பார்க்க

நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் அச்சம்

பழனி வையாபுரி குளத்தில் இருந்து சிறுநாயக்கன் குளத்துக்கு மறுகால் பாயும் தண்ணீா் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆயக்குடியில் வீடுகளில் புகுந்த மழைநீா்

பழனியை அடுத்த ஆயக்குடியில் மழைநீா் ஜோதிநகரில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திண்டுக்கல் மாவட்டம், பழனி, கொடைக்கானல் மலைப்பகுதி, சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்... மேலும் பார்க்க