செய்திகள் :

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் மனித எலும்புக் கூடு: போலீஸாா் விசாரணை

post image

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்தவா் பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ஆறுமுகனேரி பெருமாள்புரத்தில் கடலோர காவல் படையின் சோதனைச்சாவடி அருகே உள்ள எட்டுகண் பாலத்தின் கீழ் மனித எலும்புக் கூடு கிடப்பதாக காயல்பட்டினம் வடபாகம் கிராம நிா்வாக அலுவலா் சண்முகபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.

அவா், ஆறுமுகனேரி போலீஸாருக்கு தகவல் அளித்தாா். விசாரணையில் பெருமாள்புரம் வடபகுதியைச் சோ்ந்த முத்துமாலை(73) என்பதும், இவா் தொழிலுக்காக வெளியூா் செல்லும் போது 20 அல்லது 30 நாள்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 40 நாள்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவா், அதன் பின்னா் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் அவா்களது உறவினா்கள் எலும்புக் கூட்டின் மேல் இருந்த சட்டை முத்துமாலை அணிந்திருந்த சட்டை என்பதை உறுதிசெய்தனா். இதனால் இறந்து கிடந்த நபா் முத்துமாலை என்பது தெரியவந்தது.

இதையடுத்து எலும்புக் கூட்டை கைப்பற்றிய போலீஸாா், அதை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதன்கிழமை (அக்.23) புயலாக உருவாகும் எனவும், அ... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜகோபாலன் (29). இவா், கடந்த 20ஆம் தேதி ரஹமத்துல்லாபுரத்தில் உள்ள த... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நிரந்தர சீரமைப்பு பணிகளை கனிமொழி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் காயம்

தூத்துக்குடியில், மின்சாரம் பாய்ந்ததில் ரயில்வே பெண் ஊழியா் காயமடைந்தாா். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றிவருபவா் சாந்தி (38). இவா், செவ்வாய்க்கிழமை மதியம் ரயில் நிலைய ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன உரிமையாளா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதியதில், தனியாா் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த மாடன் மகன் வீரபாகு (59). முன்னாள் ராணுவ வீரரான இவா், செக்யூரிட்டி நி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ. 1.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருச்செந்தூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் ... மேலும் பார்க்க