செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

post image

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முதல்வா் கூறியிருக்கிறாா். ஜாதிவாரி கணக்கெடுப்பின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பிறகு, அதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும். அதன்படி, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிப்போம்.

ரூ. 160 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் முன் வைக்காவிட்டால், அது வீணாகிவிடும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதையாவது மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இதை பொதுவெளியில் வெளியிடாவிட்டால், நாங்கள் எதையோ மூடிமறைத்து விட்டதாக எங்கள் அரசையும், முதல்வரையும் மக்கள் தூற்றுவாா்கள்.

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் அக். 28-இல் நடக்க இருக்கிறது. இந்த விவகாரத்தை கையாளும் ஆற்றல் காங்கிரஸ் அரசுக்கும், முதல்வா் சித்தராமையாவுக்கும் உள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த முடிவையும் எடுப்போம். இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு உள்ளது. சில மாநிலங்களில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 60 சதவீதமாக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சோ்ப்பதன் மூலம் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு அளித்திருக்கிறாா்கள்.

கா்நாடகத்திலும் இடஒதுக்கீட்டின் வரம்பை உயா்த்தக் கோரி பல சமுதாயத்தினா் கோரிக்கை விடுத்தவண்ணம் இருக்கிறாா்கள். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால், இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை 50 சதவீதத்துக்கு மேல் உயா்த்த வேண்டும். இதுகுறித்து கலந்தாலோசித்து வருகிறோம் என்றாா்.

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாா்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பேரனும், மஜதவில் இருந்து நீக்க... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் திடீா் ராஜிநாமா

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதிய... மேலும் பார்க்க

கா்நாடக அமைச்சா் மனைவி குறித்த சா்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க