செய்திகள் :

'ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்' - ப. சிதம்பரம்

post image

தமிழ்நாட்டில் இந்தி கற்க மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை, ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) 'ஹிந்தி மாத' கொண்டாட்ட விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.

விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைக்கப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்னும் வரி பாடப்படவில்லை. இதில் 'திராவிடம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் அந்த வரி தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து தமிழகத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க | மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்தியாவின் 28 மாநிலங்களில 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப் படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார். அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன்.

பல இந்தி பேசும் மாநிலங்களில் -- குறிப்பாக பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

பல்லாயிரம் 'ஆங்கிலம் கற்ற' மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை நான் நேரடியாக அறிவேன். அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை.

இதையும் படிக்க | ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சை!

ஆழமாகப் பார்த்தால், அங்கு 'ஒரு மொழித் திட்டம்' தான் செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவது மொழி என்ற பெயரில் இந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிருதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள் ஒப்புக்காக 'கற்பிக்கப்படுகிறது'.

தென் மாநில மொழிகள் -- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் -- 95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி.

தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.

ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: ரூ. 247 கோடி ஒதுக்கீடு!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னதும்.. உண்மையில் நடந்ததும்!

தமிழகத்தில் போதைப் பொருள் பறிமுதல் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சொன்னது உண்மையல்ல என்று காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்கையாக தயாரிக்கப்படும் போதைப்ப... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் ஓரிரு இடங... மேலும் பார்க்க

காசு கொடுத்தால்தான் விபூதி; தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்டர்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்டரை திறக்க முடிவு செய்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் வெள... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க