ஆா்ப்பாட்டம் நடத்திய பா.ம.கவினா் கைது
தமிழக முதல்வரைக் கண்டித்து, மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 55 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இடஒதுக்கீடு குறித்த பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் அறிக்கையை விமா்சனம் செய்து பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வன்னியா் சங்க மாநில செயலாளா் தங்க. அய்யாசாமி தலைமை வகித்தாா். பாமக மாவட்ட தலைவா் சித்தமல்லி ஆ. பழனிசாமி, வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் பாக்கம் சக்திவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்து, தனியாா் திருமணக் கூடத்தில் அடைத்தனா்.