செய்திகள் :

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு

post image

லண்டனில் தனது முதல் சிம்ஃபனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பாஜக சார்பில் கரு.நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்றனர்.

அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, திரைத்துறையினரும், ரசிகர்களும் இளையராஜாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அவரை வரவேற்க வந்திருக்கிறேன்.

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

மிகப் பெரிய உலக சாதனையை நிகழ்த்தி தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா என்றார்.

உலகின் மிகச் சிறந்த பிஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இளையராஜா சிம்ஃபனியை அரங்கேற்றினார். இதன்மூலம் சிம்ஃபனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் இளையராஜா.

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல: சீமான்

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்!

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட... மேலும் பார்க்க

யார் அந்த சூப்பர் முதல்வர்?

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியிருப்பது விவாவதப் பொருளாகியுள்ளது.தேசிய ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுப்பிய 3 கேள்விகள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.தமிழக கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வ... மேலும் பார்க்க

உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை(மார்ச் 11)ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத... மேலும் பார்க்க