செய்திகள் :

இந்தியாவின் துடிப்பான ஊடகத் துறைக்கு சா்வதேச அங்கீகாரம் தேவையில்லை: மத்திய அரசு

post image

‘இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை உள்ளது; இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் தேவையில்லை’ என்று மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் உலகளாவிய பத்திரிகை சுதந்திர தரவரிசையில், செய்தியாளா்கள் சுதந்திரமாகப் பணியாற்றும் மற்றும் செய்தி வெளியிடும் திறனின் அடிப்படையில் 180 நாடுகளில் இந்தியா 159-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்ஸ்’ வெளியிட்ட இந்தத் தரவரிசையில் இலங்கை (150), பாகிஸ்தான் (152) துருக்கிக்கு (158) கீழே இந்தியா பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் எழுப்பிய கேள்விக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை செயல்பட்டு வருகிறது. இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து அங்கீகாரம் தேவையில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.

கடந்த 1978-ஆம் ஆண்டு பத்திரிகை கவுன்சில் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான தன்னாட்சி சட்ட அமைப்பான இந்திய பத்திரிகை கவுன்சில், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், பத்திரிகையாளா்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரிக்கிறது.

பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகை தரத்தைப் பராமரித்தல் தொடா்பான அவசரப் பிரச்னைகளில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவும் பத்திரிகை கவுன்சிலுக்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 1995-ஆம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் மின்னணு ஊடகங்களில் பத்திரிகை சுதந்திரம், ஒரு தன்னாட்சி ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுகிறது என்றாா்.

வாரங்கல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கப்பட்டது.இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்திலிருந்து, மிரட்டல் மின்னஞ்சல், ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்தியா!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆசிய நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் சீனா, வியட்நாம், தாய்லாந்து நாடுகளுடன் ஒப்பி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், ஓவைசி வழக்கு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், அசாதுதீன் ஓவைசி தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர். மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்... மேலும் பார்க்க

தனியார் ஏஐ முதலீட்டில் 4.8 டிரில்லியன் டாலரை எட்டும் இந்தியா!

தனியார் செயல் நுண்ணறிவு முதலீட்டில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஐ.நா. அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.உலகளவில் தனியார் செயல் நுண்ணறிவு முதலீட்டில் பத்தாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக ஐக்கிய... மேலும் பார்க்க

தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!

ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர். தளத்தைப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ரயில்களில் தொலைந்துபோன செல்போன்களைக் கண்டற... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியில் ஹிந்து மதச் சடங்குகள்: 3 பேர் கைது!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஹிந்து மதச் சடங்குகள் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இங்கு ஏற்பட்ட கலவரம்... மேலும் பார்க்க