செய்திகள் :

இந்தியாவின் மிகப் பெரிய கவலை கௌதம் கம்பீர்தான்: முன்னாள் ஆஸி. கேப்டன்

post image

இந்திய அணியின் மிகப் பெரிய கவலை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் தனது பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

பார்டர் - கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் குறித்து அவர் பேசினார். ரிக்கி பாண்டிங் தொடர்பாக கௌதம் கம்பீர் பேசியது கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: ரிஷப் பந்த்தை பார்த்து ஆஸி. வீரர்கள் பயப்படுகிறார்கள்..! ரவி சாஸ்திரி பேட்டி!

இந்தியாவின் மிகப் பெரிய கவலை

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகவும் கவலையளிக்கும் விதமாக இருக்காது எனவும், கௌதம் கம்பீரே இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக இருப்பார் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

டிம் பெய்ன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கடந்த சுற்றுப்பயணங்களின்போது, இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டார். அவர் வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமான சூழலை உருவாக்கினார். வீரர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற அதீத ஆர்வத்தோடு விளையாடினர். இந்திய அணி தற்போது புதிய பயிற்சியாளரை (கௌதம் கம்பீர்) நியமித்துள்ளது. அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். அணிக்கு பயிற்சியளிக்கும் விதம் அதுவல்ல.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்கப்படும் எளிமையான கேள்விக்கு உணர்ச்சிவசப்படும் முதல் நபராக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இருந்தால், பெர்த் போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்ன ஆகப் போகிறது எனத் தெரியவில்லை. டெஸ்ட் தொடருக்காக நீண்ட நாள்கள் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டியுள்ளது. இடையிடையே பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கும்.

இதையும் படிக்க: இந்திய அணிக்கு வலிமை சேர்க்க அவர் வந்துவிட்டார்... யாரைக் கூறுகிறார் ரவி சாஸ்திரி?

எளிய கேள்விகளுக்கு கௌதம் கம்பீர் உணர்ச்சிவசப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை. ரிக்கி பாண்டிங்குக்கு எதிராக இன்னும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் வீரர் போல கௌதம் கம்பீர் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அவரது கருத்தினை தெரிவிக்க அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவரது கருத்து முக்கியமானதாக உள்ளதால் அதிகம் பேசப்படுகிறது.

விராட் கோலி ஃபார்மில் இல்லை என்பது இந்திய அணிக்கு கண்டிப்பாக கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. ஆனால், என்னைப் பொருத்தவரை, தற்போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்மைக் காட்டிலும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அழுத்தமான சூழலில் எப்படி அமைதியாக செயல்படுகிறார் என்பதே இந்தியாவின் மிகப் பெரிய கவலையாக இருக்கும் என்றார்.

தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி சரியான தேர்வா? மேத்யூ ஹைடன் பதில்!

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சரியான தேர்வா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்... மேலும் பார்க்க

திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?

இந்திய அணியில் இனிவரும் காலங்களில் 3-வது வீரராக திலக் வர்மா களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கி முத்திரை பதித்தவர் விராட் கோலி. அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக்... மேலும் பார்க்க

“பெருமை கொள்கிறேன்...” இளம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை அந்த அணியின் சொந்த மண்ணில் வென்றது மிகவும் சிறப்பானது என தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள... மேலும் பார்க்க

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் இன்று (நவம்பர் 16) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ... மேலும் பார்க்க

கே.எல்.ராகுலை தொடர்ந்து ஷுப்மன் கில்லுக்கும் காயம்!

பார்டர் கவாஸ்கர் தொடரினை முன்னிட்டு இந்திய அணி பயிற்சி எடுத்து வருகிறது. இந்தப் பயிற்சியில் இந்தியாவின் முக்கிய வீரரான ஷுப்மன் கில் ஃபீல்டிங் செய்யும்போது இடது கையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியு... மேலும் பார்க்க

2-வது டி20: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்ட... மேலும் பார்க்க