இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா?
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பணி: உதவி மின் பணியாளர் - 2
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 52,400
தகுதி: எலக்ட்ரிக்கல், ஓயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து எச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: பிளம்பர் - 4
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பிளம்பிங் பிரிவில் ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தலைமை ஆசிரியர் - 1
சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200
தகுதி: தமிழில் முதுகலைப்பட்டம் மற்றும் பி.எட் முடித்து மேல்நிலைப் பள்ளியில் குறைந்தது ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தேவார ஆசிரியர் - 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: ஆகம பள்ளி அல்லது தேவார பாடசாலையில் 3 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: சங்கீத இசை ஆசிரியர் - 1
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: குரலிசை ஆசிரியர் படிப்பில் 3 ஆண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தொடர்பான விவரங்கள் தகுதியானவர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.in அல்லது www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவுத்தை பதிவிறக்கம் செய்தூ, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டை, அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது பணியின் வரிசை எண் மற்றும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை - 606601
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடை நாள்: 28.2.2025