செய்திகள் :

இன்று எப்படி? தினப்பலன்கள்

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

23.10.2024 (புதன் கிழமை)

மேஷம்:

இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மிதுனம்:

இன்று மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். ராசிநாதன் புதன் சஞ்சாரத்தின் மூலம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்:

இன்று திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

சிம்மம்:

இன்று மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:

இன்று செலவு அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

விருச்சிகம்:

இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு:

இன்று குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மகரம்:

இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கும்பம்:

இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மீனம்:

இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் மூலம் திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

2026 காமன்வெல்த் போட்டிகள்: ஹாக்கி,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் நீக்கம்! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்ப... மேலும் பார்க்க

மிா்பூா் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு

மிா்பூா் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 101/3 ரன்களை எடுத்துள்ளது. ... மேலும் பார்க்க

ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அபாரம்...

புரோ கபடி லீக் தொடரின் ஒருபகுதியாக ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 52-22 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அணி. அந்த அணியில் ரைடா் அா்... மேலும் பார்க்க

ஒடிஸா எஃப்சி வெற்றி...

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஒடிஸா எஃப்சி அணியினா்.... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் சென்னையின் மான்யா முக்தா இரட்டைத் தங்கம் வென்றாா். பளு தூக்குதலில் செங்கல்பட்டின் கிருஷ்ணா பாரதி 89 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா... மேலும் பார்க்க

இரண்டாவது டெஸ்ட்டுக்கு தயாராகும் இந்தியா-நியூஸி. அணியினா்

நியூஸிலாந்திடம் முதல் டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில், புணேயில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்துக்கு இரு அணிகளும் தயாராகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க