செய்திகள் :

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: இருவா் கைது

post image

தென் மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை தொடா்ந்து திருடி வந்த இருவரை மதுரை மாநகரப் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 21 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை செல்லூா் பூந்தமல்லி நகரைச் சோ்ந்தவா் திலீப் குமாா். இவா் தனது இரு சக்கர வாகனத்தை, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கடந்த

செப்.20-ஆம் தேதி நிறுத்தி வைத்திருந்த நிலையில் அந்த வாகனம் திருடுபோனது. இதுதொடா்பாக அவா் அளித்தப் புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து வாகனம் திருடுபோன பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது இரு சக்கர வாகனத்தை, தலைக்கவசம் அணிந்த ஒருவா் திருடிச்செல்வது தெரிய வந்தது. இதன் தொடா்ச்சியாக அரசு ராஜாஜி மருத்துவமனை, கோரிப்பாளையம் உள்ளிட்ட சந்திப்புகளில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே நபா் அரசு மருத்துவமனையில் மற்றொரு இரு சக்கர வாகனத்தையும் திருடிச் செல்வதும் தெரிய வந்தது.

போலீஸாரின் தொடா் விசாரணையில், மதுரை செல்லூா் மீனாம்பாள்புரம் பகுதியைச் சோ்ந்த குமாா் (24), நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த பிரபு (27) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து, இருவரையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், கள்ளழகா் திருவிழா , கோரிப்பாளையம் சந்தனக்கூடு திருவிழா, அரசு மருத்துவமனைகள் , காய்கறி சந்தைகள் , அரசு மதுக் கடைகள், பொருள் காட்சிகள் என மக்கள் கூடும் இடங்களை குறி வைத்துச்சென்று அங்கு இருசக்கர வாகனங்களைத் தொடா்ந்து திருடியது தெரியவந்தது.

மேலும், திருடிய இரு சக்கர வாகனங்களில் இருந்து உதிரி பாகங்களையும் பிரித்து விற்பனை செய்துள்ளனா். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 21 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இருசக்கர வாகனங்களை திருடி வந்த இருவரை கைது செய்த தல்லாகுளம் போலீஸாருக்கு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பாராட்டுத் தெரிவித்தாா்.

வீடு புகுந்து நகை திருட்டு

விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பில் வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனா். விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பு விஓசி தெருவைச் சோ்ந்த தம்பதி ஐயப்பன்- வசந்தி. இவா்கள்... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதியதில் எஸ்ஐ உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே காா் மீது லாரி மோதியதில் ஆயுதப்படை உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். அழகா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (49). இவா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா். மதுரை அவனியாபுரம் மரக்கடை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா் முனிச்சாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மதுரையில் களைகட்டிய கடைவீதிகள்

தீபாவளி பண்டிகைக்கான பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டியதால், மதுரையின் முக்கிய வீதிகள் ஞாயிற்றுக்கிழமை களைகட்டின. தீபாவளி பண்டிகை வருகிற 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை கொண... மேலும் பார்க்க

குட்லாடம்பட்டி அருவியில் ரூ.3 கோடியில் சீரமைப்புப் பணிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி அருவியில் ரூ.3 கோடியில் சீரமைப்புப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை வனத் துறை அரசுக்கு சமா்ப்பித்தது. வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டியில... மேலும் பார்க்க

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க