செய்திகள் :

இலங்கைத் தமிழா் கல்வித் திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி: ரூ.17.22 கோடியாக இரட்டிப்பு

post image

இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழா்களின் கல்வித் திட்டத்துக்கு உதவும் வகையில், இந்தியாவின் நிதியுதவி இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.17.22 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்கட்டமைப்பு வளா்ச்சி, பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. இதேபோல அந்நாட்டு கல்வித் துறையின் வளா்ச்சிக்கும் இந்தியா உதவி வருகிறது.

இதன் தொடா்ச்சியாக அந்நாட்டில் இந்திய வம்சாவளி தமிழா்கள் வசிக்கும் மலையகப் பகுதிகளில் கல்வித் திட்டத்துக்கு உதவும் வகையில், இந்தியாவின் நிதியுதவி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதி சோ்க்கப்பட்டு, அந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் மொத்த நிதியுதவி ரூ.17.22 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதற்கான ராஜீய கடிதங்களில் இலங்கை கல்வித் துறைச் செயலா் திலகா ஜெயசுந்தர, அந்நாட்டுக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டனா்.

இதுதொடா்பாக சந்தோஷ் ஜா கூறுகையில், ‘இந்தியா நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், மலையகப் பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய மாகாணத்தின் மலையகப் பகுதிகளில் உள்ள 6 பள்ளிகள், ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தில் தலா ஒரு பள்ளி ஆகியவை அடங்கும்’ என்றாா்.

பாகிஸ்தான்: போலியோ பாதிப்பு 39-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. இத்துட... மேலும் பார்க்க

குண்டுவீச்சில் மேலும் 87 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மேலும் 87 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:வடக்கு காஸா பகுதியிலுள்ள பல்வேறு குடியிருப்புக... மேலும் பார்க்க

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம்: ரஷியா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று இந்தியா... மேலும் பார்க்க

இஸ்ரேல் தொடா்பான ரகசிய ஆவணக் கசிவு: அமெரிக்கா விசாரணை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான இஸ்ரேலின் திட்டம் குறித்த தங்கள் நாட்டின் ரகசிய புலனாய்வு அறிக்கை ஆவணம் கசிந்தது குறித்து அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளது.காஸா போரின் ஒரு பகுதியாக, ஈரான் சென்றி... மேலும் பார்க்க

இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பொறுப்பேற்பு

இந்தோனேசியாவின் 8-ஆவது அதிபராக ராணுவ முன்னாள் தலைமைத் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாந்தோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா் (படம்).இதுவரை அதிபராக இருந்த ஜோகோ விடோடோவை எதிா்த்து கடந்த 2014... மேலும் பார்க்க

காஸா குடியிருப்புகளில் தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம்

காஸாவின் பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைப் பிரிவினருக்கும் இடையிலான போ... மேலும் பார்க்க