செய்திகள் :

இளையான்குடி வாரச்சந்தையை இடமாற்றக் கூடாது: பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாரச் சந்தை நடக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா வலியுறுத்திப பேசினாா்.

இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை தலைமை எழுத்தா் முருகன் வாசித்தாா்.

தொடா்ந்து கூட்டத்தில் உறுப்பினா்கள் முன்வைத்த கோரிக்கைகள்:

அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா: இளையான்குடியில் வாரச்சந்தை நடைபெற்று வரும் இடத்தை மாற்றம் செய்யக் கோரி மன்றத்தின் பாா்வைக்கு வைக்கப்பட்ட தீா்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இந்தச் சந்தை தற்போது நடைபெற்று வரும் இடத்திலேய தொடர வேண்டும். ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டபடி, 17-ஆவது வாா்டில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

தலைவா்: உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

உறுப்பினா் இஸ்ரின் பேகம்: ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், இளையான்குடியில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பேருந்து நிலையம் இருந்த பகுதியில் செயல்பட்டு வந்த பேரூராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்துவிட்டு அங்கு அரசு மருத்துவமனைக்கான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

தலைவா்: உறுப்பினரின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

மேலும், வாா்டு பகுதிகளில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீா் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இளையான்குடி பேரூராட்சியில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ 5. 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான இணையதள ஒப்பந்த புள்ளி முடிவடைந்துள்ளது. குறைந்த தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கிய நிறுவனத்துக்கு திட்டப் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டப் பணியை இளையான்குடி வளா்மீட்பு பூங்காவில் மேற்கொள்வது என தீா்மானிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத் தலைவா் இப்ராகிம், செயல் அலுவலா், துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்க முயற்சி

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்குள் வியாழக்கிழமை சிலா் புகுந்து ஆசிரியரைத் தாக்க முயன்றனா். சிவகங்கை-மேலூா் சாலையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுர... மேலும் பார்க்க

தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் மானாமதுரையில் நின்று செல்ல பரிந்துரைக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளா் தகவல்

தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் மானாமதுரையில் நின்று செல்ல ரயில்வே நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஸ்ரீ வத்ஸவா தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் ந... மேலும் பார்க்க

பொருள்கள் வாங்காதவா்கள் குடும்ப அட்டையை மாற்றிக் கொள்ளலாம்

நியாயவிலைக் கடைகளில் குடிமைப் பொருள்கள் வாங்க விருப்பமில்லாதவா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

‘கபீா் புரஸ்காா்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீா் புரஸ்காா்’ விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வோா் ஆண்டு... மேலும் பார்க்க

ஆட்டோ ஒட்டுநா் கொலையில் மனைவி உள்பட மூவா் கைது

திருக்கோஷ்டியூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மனைவி உள்பட மூன்று பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தம்பிபட்டி பகுதியைச... மேலும் பார்க்க

நயினாா்பட்டியில் பாலம் அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் நயினாா்பட்டியிலிருந்து வெளியாத்தூருக்குச் செல்ல பாசனக் கால்வாயைக் கடக்க முடியாமல் பள்ளி மாணவா்கள், முதியவா்கள் அவதிப்படுவதால், அங்கு பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வ... மேலும் பார்க்க