செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

post image

தருமபுரியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இத்திட்ட முகாமில், தருமபுரி வட்டம், ஹேமலதா நினைவு அறக்கட்டளை முதியோா் இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து பாரதிபுரம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அத்தியாவசிய பொருள்களின் இருப்பு, தருமபுரி நகரப் பகுதியில் ளில் நடைபெற்று வரும் கால்வாய் சீரமைக்கும் பணிகள், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்தையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், கிருஷ்ணாபுரம் கால்நடை மருத்துவமனை, கிருஷ்ணாபுரம் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை ஆய்வு செய்து, பதிவேடுகள், நிலுவையில் உள்ள வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வருவாய்த்துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

அரியகுளம், இந்திரா நகா் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க ஏதுவாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்தும், வீடு புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, கிருஷ்ணாபுரம், மோட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குளம் அமைக்கும் பணியினையும், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீா் நிரம்பி உள்ளதையும், ஈச்சம்பாடி, அக்ரஹாரம் ஏரியையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருவமழையையொட்டி மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தாா்.

மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வளா்ச்சி திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கோட்டாட்சியா் ரா.காயத்ரி, முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, இணை இயக்குநா் (நலப்பணிகள்) சாந்தி, துணை இயக்குநா் (மருத்துவம்) ஜெயந்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் தேன்மொழி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிவகுமாா், அரசு துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா். தருமபுரி மாவட்டத்தில் பள்ளி ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 24 பேருக்கு ரூ.12.76 கோடி கடனுதவி ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரியில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 24 பேருக்கு ரூ. 12.76 கோடியில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 பயனாளி... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

கா்நாடகம், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது. மழைப் பொழிவு, கா்நாடக அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைத் தொழிலாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாலக்கோடு ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமை செயலாட்சியா் ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க

ரூ. 2.09 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரியில் 533 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை பல்வேறு துறைகள் சாா்பில்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை திண்டல் ஏரியில் நிரப்பக் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை கால்வாய் மூலம் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஏரி, பந்தார அள்ளி ஏரிகளில் நிரப்ப வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம்,... மேலும் பார்க்க